பிரித்தானியாவின் மான்சஸ்டர் (Manchester) மாகாணத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் திருமண உடையணிந்து கிறிஸ்டி என்ற பெண் தனது வருங்கால கணவருடன் வந்திருந்தார்.
அப்போது ஹொட்டல் காவலாளியை பார்த்த கிறிஸ்டி, அந்நபரின் இனத்தை சுட்டிக்காட்டி கொச்சையாக பேசியுள்ளார்.
மேலும் அந்நபரை கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கியதுடன், அவர் முகத்தில் எச்சில் துப்பி இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அப்பெண்ணை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 150 யூரோக்கள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டி தனது முதலிரவை சிறையில் கழித்துள்ளதாக கூறப்படுகிறது..
0 comments:
Post a Comment