↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்த கத்தி படத்தின் வெற்றி விழா பல்வேறு நகரங்களில் விஜய் ரசிகர்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நெல்லையில் வரும் 14ஆம் தேதி கத்தி படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த வெற்றி விழாவில் விஜய், முருகதாஸ், அனிருத், சமந்தா, சதிஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். திருச்செந்தூர் சாலையில் உள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த விழாவுக்கான ஏற்பாட்டுகளை நெல்லை விஜய் ரசிகர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார். இந்த விழாவில் விஜய் அரசியல் நிலவரம் குறித்து ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது குறித்து விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top