சில நாட்களுக்கு முன் த்ரிஷா பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியளித்தது. ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த த்ரிஷா, இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் ராணாவை கழட்டிவிட்டதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில் திடீரென தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படங்களும் வெளி வந்தது. ஆனால் த்ரிஷா இதை திட்டவட்டமாக மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:– கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது. மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம்.
விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment