தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகளை ‘ஸ்மார்ட் கார்ட்‘ முறையில் வழங்க பரிசீலனைசெய்யப்படுவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சுமார் 1.96 கோடி ரேஷன்கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பலலட்சம் போலி ரேஷன் கார்டுகள் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. இதனால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம்வழங்கப்படும் மானியம் வீணாகி வருகிறது. போலி கார்டுகளை தடுக்க முடியாமல் அரசும் திணறுகிறது. ஆய்வின் போதுஒவ்வொரு முறையும் பல லட்சம் போலி கார்டுகள் பிடிபடுகின்றன.
தமிழகத்தில் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை செல்லத்தக்க வகையில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. புதிய கார்டுவழங்காததால் பழைய கார்டில் காலியாக இருந்த தாள் 2010ம் ஆண்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த2011ம் ஆண்டு முதல் உள்தாள் இணைக்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டிற்கான அச்சிட்டப்பட்ட உள்தாள்கள் ரேஷன்கடைகளுக்கு அனுப்பட்டுள்ளன. உள்தாள்கள் வரும் 15ம் தேதி முதல் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படஉள்ளன.இந்நிலையில், 2016ம் ஆண்டு முதல் ரேஷன்கார்டுகளை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது.
ஸ்மார்ட் கார்டு தொடர்பாக வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசும் பயோ மெட்ரிக் முறையிலானஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை 2016ம் ஆண்டுக்குள் வழங்க பரிசீலனை செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட் ரேஷன்கார்டு,ஏடிஎம் கார்டு வடிவில் இருக்கும். இந்த கார்டுகளை ரேஷன்கடைகளில் வைக்கப்பட உள்ள இயந்திரங்களில் வைத்து பதிவுசெய்யப்படும். சரக்கு வாங்க வரும் நபரின் கைரேகை பதிவும், ஸ்மார்ட் கார்டில் உள்ள கைரேகை பதிவும் ஒன்றாகஇருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெறமுடியும்.
இதற்காக ஆதார் அடையாள அட்டைக்காக எடுக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக்கை பயன்படுத்தி கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரது கைரேகை, கண் கருவிழி படலங்கள் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளில் பதிவு செய்யப்படும். இதனால் போலி ரேஷன் கார்டு பிரச்னை அடியோடு ஒழிக்கப்பட்டு விடும். ஸ்மார்ட்ரேஷன்கார்டுக்கான பணிகள் 2015, ஜூலையில் துவங்கி 2016 ஜனவரிக்குள் வழங்கப்படலாம். ரேஷன் கார்டு நகல் கோரும்அனைத்து திட்டங்களுக்கும் இனி வரும் காலங்களில் ஆதார் அடையாள அட்டை நகல்கள் இணைத்து வழங்க வேண்டியநிலை வரும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
0 comments:
Post a Comment