↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களை அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ஆறாவது படம் மாஸ், சூர்யா, நயன்தாரா, எமிஜாக்ஸன், பிரேம்ஜி, ரா.பார்த்திபன், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
வித்தியாசமான கமர்சியல் படங்களை காமெடி கலந்து கொடுத்து வந்த வெங்கட்பிரபு தற்போது கையில் எடுத்து இருப்பது காமெடி கலந்த பேய் படம். 1980களில் பேய் ஒரு மர்ம உருவாக சித்தரித்து பல படங்கள் வந்தது, பின்பு பேய் என்பது வெள்ளை புடவை அணிந்து இருக்கும் என்று சித்தரிக்கப்பட்டது, டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக பேய் கலராக மாறியது.
அதோடு பேய் பயமுறுத்தும் என்று இருந்த காலம் போய் பேய் நல்லா காமெடி பண்ணும் தெரியுமா என்று கூறும் அளவிற்கு படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் பேயாக நடிக்கும் எமிஜாக்ஸன் ஸ்டைலான பேயாக நடிக்கிறார்.
அதோடு இந்த படத்தில் பேய்யும் கவர்ச்சி காட்டி நடிக்கும் என எதிர்பார்க்கலாம். வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top