↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லிங்கா’ படத்தை வரவேற்க, மும்பை ரஜினி ரசிகர்கள் இப்போதே தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், ‘லிங்கா’. ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், படத்தை வரவேற்க மும்பை ரசிகர்கள் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

மும்பை மாட்டுங்காவில் உள்ள அரோரா தியேட்டரில் லிங்கா படம் ரிலீஸ் ஆகிறது. இதற்காக தியேட்டர் பெயின்ட் அடிக்கப்பட்டு புதுமைக்கு மாறுகிறது. 80 அடிக்கு ரஜினியின் பிரமாண்ட கட் அவுட், மற்றும் பாலாபிஷேகம், பல ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு என ரசிகர்கள் இப்போதே லிங்காவை வரவேற்கத் தயாராகிவிட்டனர்.

இதுபற்றி மும்பை அரோரா தியேட்டர் அதிபர் நம்பிராஜனிடம் கேட்டபோது, ‘ரஜினியின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது எங்கள் தியேட்டருக்கு புது பெயின்ட் அடித்து கலர் மாற்றிவிடுவேன். இப்போதும் அதை செய்கிறேன். லிங்கா ரிலீஸ் அன்று தியேட்டர் புதிதாக இருக்கும். பாலாபிஷேகம், கட் அவுட்கள் தொடர்பாக மும்பை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் பேசியுள்ளனர். ரஜினியின் முந்தைய படத்துக்கு 60 அடியில் கட் அவுட் வைத்திருந்தனர். இப்போது 80 அடிக்கு வைக்க உள்ளனர். மற்றபடி சென்னையில் நடப்பது போல பாலாபிஷேகம், பட்டாசு கொண்டாட்டங்கள் இங்கும் நடக்கும்’ என்றார்.

...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top