↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பாவுக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெமன் என்ற போராட்டக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், அரைநிர்வாண போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போப்பின் வருகையைக் கண்டித்து ஸ்டிராஸ்பர்க் நகரில் "செக்ஸ்ட்ரீமிஸ்ட்ஸ்" அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் மேலாடை இல்லாமல் தேவாலயம் ஒன்றில் போராட்டம் நடத்தியுள்ளார்.
பிரான்சின், ஸ்டிராஸ்பர்க் நகர தேவாலயத்திற்குள் புகுந்த இவர், அங்கு மேலாடை இல்லாமல் மேடை ஒன்றின் மீது ஏறினார். பின்னர் தனது கையில் ஐரோப்பிய யூனியன் கொடியை பிடித்தபடி சிறிது நேரம் கொடியை ஆட்டியபடி இருந்தார்.
பின்னர் வேகமாக கீழே இறங்கி ஓட்டமும் நடையுமாக வெளியேறி விட்டார். மதச்சார்பற்ற ஐரோப்பா தேவை என்ற கோஷத்துடன் இந்த அழகி இப்போராட்டத்தை நடத்தியுள்ளார்.
மேலும் போப்பாண்டவர் ஒரு மதச்சார்பான நபர், துரோகி என்று தனது மார்பில் அவர் எழுதியிருந்தார்.
மேலும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் போப்பாண்டவரை பேச அழைத்திருப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top