↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாரதிராஜாவுக்கு இன்னமும் ரஜினி மீதான கோபம் தீரவில்லை.. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை தாக்குவதில் குறையே வைப்பதில்லை.. இந்த வாரத்திய ‘ஆனந்தவிகடனி’லும் இதே கதைதான்.. மீடியாக்கள் ரஜினியை அரசியலுக்கு  அழை்பபது பற்றி கோபமான வார்த்தைகளை வீசியிருக்கிறார்.
நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா..?

“இதுக்கு அடிப்படையான காரணம் யார்.. சொல்லுங்க.. ஊடகம்தானே..? நடிகர்களைத் தூண்டிவிட்டு, அரசியலுக்கு வருவீங்களான்னு முதல் கேள்வி கேட்குது.

‘சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடைல உணர்ச்சிகரமாப் பேசுறீங்க.. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது?’ன்னு என்கிட்டயே கேக்குறீங்க.. Why they are doing like this..? ஒரு நடிகன்கிட்ட ‘எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க’ன்னு கேளுங்க.. அதைவிட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்குறீங்க? சரி.. அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுய புத்தி வேணும்..

அது கலைஞர் மேடையாக இருக்கட்டும். மேடம் மேடையாக இருக்கட்டும். எல்லா மேடையிலேயும் நான் இதைச் சொல்லியிருக்கேன்… ‘தயவு செஞ்சு எங்களை ரொமப்ப் பக்கத்துல வெச்சுக்காதீங்க.. ஏன்னா, பேசும்போது நீங்க எங்களுக்குத் தெரியறதே இல்லை.. உங்க நாற்காலிகள்தான் கண்ணுக்குத் தெரியுது’ன்னு..!
அரசியலில் ஈடுபட எனக்கென்ன தகுதியிருக்கு..? சமூகத்தில் என் பொறுப்பு.. ‘ஒரு கதை சொல்லி’.. அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்..

First of all.. ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதியிருக்கு..? ‘இந்த நாட்ல எத்தனை ஜீவ நதிகள் ஓடுது?’ன்னு சொல்லச் சொல்லுங்க. ‘எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல் போச்சு?’ன்னு தெரியுமான்னு கேளுங்க. “இந்தியால எத்தனை டேம் இருக்கு?’ன்னு கேட்டுப் பாருங்க. “வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் கலாச்சார ரீதியா எ்ன்ன வித்தியாசம்னு தெரியுமா?’ன்னு கேளுங்க..
ச்சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வைச்சு 50 பேருக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திட்டா அரசியலுக்கு வந்திரலாமா..? What is this..? எனக்கு எந்தப் பயமும் இல்ல.. நான் சொல்றதை அப்படியே போடுங்க.. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா..? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படியெ்லலாம் நடக்குது..!
சினிமாவில் இருப்பவர்கள் எப்போதுதான் அரசியலுக்கு வருவது..?

சினிமாவில் இருந்து விலகி 10 வருடங்கள் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எ்லலாம் செய்து.. மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். Go and Work Fast..

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம்.ஆக ஆசைப்படக் கூடாது.. 20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.. What is this nonsense..? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டு, அப்புறம் அரசியல் கட்சில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்..

ஸார்.. ஒரு உண்மையைச் சொல்றேன்.. I’m telling frank truth.. ஒரு நல்ல கலைஞன் அரசியலுக்குப் போக மாட்டான். மகாத்மா காந்தி என்னைக்காவது சேர்ல உட்கார்ந்தாரா..? அன்னை தெரசா போஸ்டிங் எடுத்துக்கிட்டா சேவை செஞ்சாங்க..? அவங்களைவிடவா இவங்க எல்லாம் நல்லது பண்ணிடப் போறாங்க.. காமராஜர் ஒருத்தர் மட்டும்தான் அரசியல்ல இருந்தாலும் சமூகம் சார்ந்து சேவை செய்தவர்..!”
- இப்படி விளாசியிருக்கிறார் பாரதிராஜா..

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top