↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கோலிவுட்டின் அதிஷ்ட நாயகி என்றழைக்கப்படும் லட்சுமி மேனன் தற்போது கார்த்தியின் கொம்பன் மற்றும் விஷால் படம் மட்டும் தான் கைவசம் வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் வார இதழ் ஒன்றிக்கு அளித்து பேட்டியில், தான் சிறு வயதிலிருந்தே சூர்யா ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருவது பற்றி கேட்டதற்கு, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னை அனுகவில்லை. அது வெறும் வதந்தியே என்றார்.
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நீங்கள் நடிப்பதாக இருந்ததே… என்ன ஆயிற்று? அது கன்ஃபார்ம் ஆகவில்லை. ஆனால், அந்தப் படத்துக்கான டிஸ்கஷன் நடந்தது. முழு ஸ்கிரிப்ட்டையும் நான் கேட்டேன். ஆனால், என்ன ஆனதென்று தெரியவில்லை. இதுவரைக்கும் அதைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆர்யா ஹேண்ட்சம் ஹீரோ. அவரை எல்லோருக்குமே பிடிக்கும்.
அம்மாவுடன் சண்டை, பாட்டியுடன் சென்னையில் செட்டிலாகப் போகிறார் என்று செய்தி பரவியதே… அம்மா கூடத்தான் சண்டை போட முடியும். என் வீட்டில் இருப்பவர்களை விட்டுவிட்டு, வெளியில் இருப்பவர்களுடனா சண்டை போட முடியும்? பாட்டியுடன் சென்னையில் செட்டிலாகப் போகிறேன் என்ற விஷயம் எனக்கே தெரியாதது, பார்க்கலாம் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top