↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் கதைக்கும், மதுபானத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படங்களில் புகைப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும். ஆனால், கடைசியாக வெளிவந்த ‘அழகுராஜா’ படத்திலிருந்து இனி தான் இயக்கும் எந்தப் படத்திலும் சிகரெட், மதுபானம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறாது என்று உறுதியளித்திருந்தார் ராஜேஷ். இந்நிலையில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர்.
இந்தப் படத்திற்கு ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்கிற வித்தியாசமான தலைப்பை தேடிப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதை ஆங்கிலத்துல எழுதி சுருக்கமா சொன்னா VSOP அப்படின்னு வரும். ‘VSOP’ என்பது மதுபானங்களுக்கு வழங்கப்படும் ஒரு சர்வதேச சர்டிஃபிகேட். இதனால் படத்தின் தலைப்பு மீது சர்ச்சை கிளம்பியது. ஆனால் இதற்கு படத்தின் இயக்குனர் ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, படத்தில் நாயகன் ஆர்யா, சந்தானம் இருவரும் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். இதுல ஆர்யாதான் வாசு.. சந்தானம் தான் சரவணன்.
எனவே, அவர்களின் கேரக்டர் பெயர்களை மனதில் வைத்தே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற டைட்டிலை வைத்தேன். இது யதேச்சையாக நடந்த ஒன்றுதான். மற்றபடி ‘VSOP’ என வரவேண்டும் என்பதற்காக இந்த டைட்டிலை உருவாக்கவில்லை. அதேபோல் இப்படத்தின் கதைக்கும், மதுபானத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. முன்பு நான் சொன்னதுபோல், இந்தப் படத்திலும் எனது நாயகன் புகைப்பது போன்ற காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறாது’’ என்று ராஜேஷ் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top