↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இலங்கை அரசியலில் என்றுமில்லாத அரசியல் பர பரப்பு கடந்த வாரத்த்தில் இருந்து
சூடு பிடித்துள்ளது .
ஆளும் மகிந்தா அரசின் தற்போதுள்ள நூற்றி ஐம்பத்திரண்டு ஆசனங்களில்
சரி பாதியாவது தமது பக்கம் இழுக்க வேண்டும் என்ற தீவிர கூட்டு நகர்வில் காய்கள் நகர்த்த பட்டு வருகின்றன .
இதற்காக பல மில்லியன் வீச படுகிறது .பணம் மட்டுமலல் உங்களுக்கு அந்த பதவி தரப்படும் என கூறியே இந்த
உடைப்புக்கள் இடம்பெறுகின்றன .
மைத்திரி பால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்த பட்டதே இவர்கள் கூறும் பதவிகள்
தமக்கு தரப்படும் என்ற நப்பாசையில் இவர்கள் எதிரணிக்கு மாறுவதாகும் .
ஆனால் சந்திரிக்கா தனக்கு பதவி வேண்டாம் என ஒதுங்கியதும் ரணில் போட்டியிடாது மைத்திரிக்கு
விட்டு கொடுத்ததன் பின் புலம் என்ன தெரியுமா ..?
மேட்டர் இது தான் …அதாவது தேர்தலில் ஆளும் மகிந்தா கட்சியை பலவீன படுத்துவதன் ஊடாக அறுதி பெரும்பான்மை இன்றி
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலையை தோற்றுவித்தல் .
அவ்விதம் ஏற்பட்டால் வெல்லும் எந்த கட்சியோ அது தமக்கு தேவையான ஆசனங்களை
பெற்று கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் இதுக்கு வேற பேரம் பேச்சுக்கள் இடம் பெறும்
இந்த கூட்டணிக்கு ஆதரவு தருபவர்கள் ஆட்சி அமைக்க தமது பங்களிப்பை தராது விடின் மறு கட்சி ஆட்சியில் அமரும் நிலை ஏற்படும்
இல்லை என்றால் மறு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் .
எந்த ஒரு சட்டமும் நிறைவேற்ற முடியாத சூழல் இதன் ஊடாக ஏற்படும் .பாராளுமன்றில் கொண்டுவரப்படும் பிரோரனைகள்
தோற்கடிக்க படும் .அப்படி பார்த்தால் பொம்மை ஆட்சி ஒன்று இருப்பதாகும் .
இன்று மைத்திரி கூறும் நிறைவேற்று சேனாதிபதி ஒழிப்பும் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும்
இந்த உள்ளக மைய நோக்கத்துடனேயே காய்கள் தீவிரமாக நகர்த்த படுகின்றன .
இது சாத்தியமும் கூட .
கடந்த காலங்களில் அதாவது மகிந்தா ஆட்சிக்கு முன்னர் இவ்விதமான கூட்டணி ஆட்சியே இடம்பெற்றதை மறக்க இயலாது .
அவ்விதம் கூட்டணி வைக்கும் கட்சிகளில் தற்போது உள்ள எதிரனிக்குள் சிக்கல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது சிலவேளை இந்த கட்சிகளும்
உடைய வாய்ப்பிருக்கிறது .
இந்த முக்கோண இடியப்ப சிக்கலுக்குள் சிக்கவே குதிரை ஓட்டங்கள் நடக்கின்றன
இதில் ரணிலும் .சந்தரிக்காவும் கில்லாடிகள்
அம்மணியின் ஆட்சியை அப்பிடித்தான் பிரதமராக இருந்து ரணில் கவிழ்த்தவர் .
எப்பாடு பட்டாவது மகிந்தவை பெரும் பான்மை பலத்துடன் வெற்றி பெறாது தோற்கடிப்பதே இப்போது இவர்களுக்கு உள்ள
முதல் தெரிவு அது நோக்கியே இந்த பாய்ச்சல்கள் இடம்பெறுகின்றன .
வெளிப்படையாக சொல்ல போனால் விடயம் இது தான் .மேலே சொன்ன நம்ம கணக்கு வரும் காலத்தில்
நடக்கும் இருந்து பாருங்கள் .
ஆனால் இம்முறையும் மகிந்தா தேர்தலில் வரும் போது வடக்கு தமிழர்களின் வாக்கு எப்படி தேவை பட்டதோ அதே இந்த தேர்தலில்
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்குகளாக தமிழர்கள் இருக்க போகின்றனர் .
இவ்வேளை கூட்டமைப்பு தகுந்த திட்டங்களை வகுத்து செயல் பட்டு தமது ஆசனங்களை
அத்தனையும் பெறும்எனின் இது வரலாற்று நெத்தியடியாக சிங்களத்துக்கு அமையும் .
உலக நாடுகளும் தமிழர்களை திரும்பி பார்க்கும் நிலையம் உருவாகும் .
ஆனால் கூட்டமைப்பை மிரட்ட இந்தியா நிச்சயமாக முனையும்
இந்தியாவின் திட்டங்களையே கூடமைப்பு நிறைவேற்ற துடிக்கும் எனலாம்
கூட்டமிப்பின் முக்கியஸ்தர்கள் வரும் வாரங்களில் இந்திய பறக்க கூடிய சூழல் அல்லது
இந்துயா தூதரகம் புகுந்து விளையாடும் நிலை தோற்றுவிக்க படலாம் .
இவர்களும் வென்ற பின்னர் விலைபோகாமல் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் .
கூட்டமைப்பை நம்ப முடியாது பணத்தை கொடுத்தால் செல்வம் .சுரேன் .சுமந்திரன் .இன்னும் சிலர்
ஆள்பவர்கள் பக்கம் சாய்வார்கள் என்பதை இப்போதே தெரிவித்து கொள்ளலாம் .
ஆக இது தவிர்க்க பட முடியாத வில்லங்கமான விசித்திரமான பல வன்முறைகள் படுகொலைகளுடன்
இந்த தேர்தல் நடை பெற போகிறது .
இதில் எந்த முக்கிய தலை விழ போகிறதோ தெரியவில்லை .
காரணம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் மகிந்த குடும்பம் .தோற்றால் அவ்வளவு தான் சவ பெட்டிக்குள்
அடக்கம் தான் .மகிந்த செய்திராத பல மாற்றங்கள் அதிரடியாக தென் இலங்கையில் நடக்கும்
இது மகிந்த அகும்பளுக்கான .அந்த குடும்பத்திற்கான சாவு மணி .
அதற்காகவே இந்த சந்தர்ப்பவாத கூட்டணி சங்கூதுகிறது என்றால் அது மிகையல்ல .
- மாறன் -


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top