↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தற்போது பிரிந்துள்ள த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காதல் என்றால் ஊடல் இல்லாமலா. ஆனால் த்ரிஷா, ராணா காதலில் ஊடல் பெரும்பகுதி வகிக்கிறது. அவர்கள் சேர்வதும், பிரிவதுமாக பல ஆண்டுகளாக உள்ளனர். 

ஒவ்வொரு முறை அவர்கள் பிரியும்போதும் ராணாவின் வாழ்வில் வேறொரு நடிகை வந்திருப்பார். ராணா தற்போது அனைத்து உட்களிலும் தவித்துக் கொண்டிருக்கும் நடிகையை தான் முதலில் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் பிரிந்த பிறகு தான் த்ரிஷா ராணா வாழ்வில் வந்தாராம். இதில் விந்தை என்னவென்றால் அந்த மார்க்கெட் இல்லா நடிகையும் ராணாவும் பிரிய காரணம் இந்தி நடிகை பிபாஷா பாசு என்று அப்போது பரபரப்பாக பேச்சாகக் கிடந்தது. 

ராணா தற்போது த்ரிஷாவை பிரிந்தது பிபாஷாவுடன் மீண்டும் சேரத் தான் என்று கூறப்படுகிறது. பிபாஷாவும் ராணாவுடன் சேர இத்தனை நாட்களாக காதலராக இருந்த நடிகர் ஹர்மான் பவேஜாவை பிரிந்துவிட்டாராம். தலை சுத்துதா. இதற்கிடையே த்ரிஷாவும் ராணாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிவதற்கு காரணம் ஒரு உதட்டழகி இந்தி நடிகை. காதல் கசந்துவிட்ட த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இதற்கிடையே பிபாஷாவை தேடிப் போன ராணாவோ அண்மையில் ஒரு பேட்டியில் எனக்கு அனுஷ்காவை பிடிக்கும், ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த குழப்பங்களை எல்லாம் பார்க்கையில் த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேரலாம் அதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top