↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரம்மாண்ட செட்டிற்கு நடுவே விஜய்யின் புதிய படமான மாரீசன் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. பாடல் காட்சியில் தொடங்கியுள்ள இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார்கள். தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன். டிசம்பர் 2வது வாரத்தில் படப்பிடிப்பபை முடித்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி, கன்னட நடிகர் சுதீப் நடிக்கிறார்கள்.
பெங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் விஜய்யுடன் நடிக்கும் படத்தின் சம்பந்தமான கேள்விக்கு எக்குத்தப்பாக பதிலை கூறி படத்தின் ரகசியத்தை ஒலறிவிட்டார் சுதீப். அவர் கூறியதாவது, விஜய்யுடன் நான் நடிப்பது உண்மை தான். இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியும் நடிக்கிறார். விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும், நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் திறமையானவராக விஜய் இருக்கிறார். அவருடன் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் நான் எதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எதிரி என்றால் நீங்கள் நினைப்பதுபோல வில்லன் வேடமில்லை, என் கதாபாத்திரம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும் என்பது மாதிரி இருக்கும். அரசவை ராணியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். படைத்தளபதியாக நான் நடிக்கிறேன் என்று கதையின் ரகசியத்தை ஒவ்வொன்றையும் புட்டு புட்டு மீடியா முன் வைத்துவிட்டார் சுதீப்.
இப்பயே எல்லோரும் படத்தை பற்றி ரகசியத்தை வெளியிட்டால்... படப்பிடிப்பு முடிவதற்குள் படத்தின் மொத்த கதையும் கசிந்துவிடும். படம் பார்க்கும் போது சுவாரஸ்யமும் குறைந்துவிடும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top