மனைவி சுனந்தாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பொலிசின் விசாரணை அறிக்கைக்காக காத்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். |
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசிதரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17ம் திகதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அப்போது, சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சுனந்தாவிற்கு இயற்கைக்கு மாறான உடனடி மரணம் நேரிட்டு உள்ளது. அவருடைய உடலில் சில காயங்கள் இருந்தன. எனினும் இதற்கும், அவரது மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் சுனந்தா புஷ்கரின் உடலை பிரேதபரிசோதனை செய்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு நேற்று முன்தினம் ஒரு புதிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், சுனந்தாவின் மரணம் விஷத்தால் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இது ஏற்கனவே, மத்திய தடய அறிவியல் பரிசோதனைக் கூடம் அளித்ததன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனால் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரிய வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு தாக்கல் செய்த புதிய அறிக்கை பற்றி சசிதரூர் நேற்று முன்தினம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று பாலக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்த சசிதரூர் இது தொடர்பாக தனது மௌனத்தை கலைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த விடயத்தில் முதல் நாளில் இருந்தே நான் பொலிசிற்கு ஒத்துழைத்து வருகிறேன். அதேபோல் ஆரம்பம் முதலே விசாரணை அறிக்கையையும் கேட்டு வருகிறேன். இப்போதும் அவர்களது அறிக்கைக்காக காத்து இருக்கிறேன். ஆனால், பொலிசிடம் இருந்து இது தொடர்பாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தொடக்கத்தில் என்ன நிலையில் இருந்தேனோ, அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறேன். முதல் நாளில் சொன்னதைத் தான் இப்போதும் சொல்கிறேன். முதலில் பொலிஸ் விசாரணை முடிவடையட்டும். அதன்பிறகு எனது கருத்தை சொல்கிறேன் என்று கூறியுள்ளார். |
சுனந்தா மரணம்: பாட்டி வீட்டில் மௌனத்தை கலைந்த சசிதரூர்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment