↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பலவிதமான பிரச்சனைகளை தாண்டி ரிலீஸான கார்த்தியின் 'கொம்பன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் முத்தையா உள்பட படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் உச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு கொம்பன் பட வெற்றியால் மற்றுமொரு இன்ப அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொம்பன் திரைப்படம் படக்குழுவினர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படத்தின் இயக்குனர் எம்.முத்தையாவிற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. தன்னை மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களையும் திருப்தி செய்தி இயக்குனருக்கு தான் அளிக்கும் ஒரு சிறு பரிசுதான் இந்த இன்னோவா கார் என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள 'கொம்பன்' திரைப்படம் நல்ல வசூலுடன் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றுத்தரும் படம் இதுவாகத்தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. மெட்ராஸ், கொம்பன் என இரண்டு தொடர் வெற்றிகளை கொடுத்துவிட்ட கார்த்தி, ஹாட்ரிக் வெற்றிப்படத்தை விரைவில் தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top