↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ராஜீவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'சயனைடு, சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட 'வனயுத்தம்' ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'ஒரு மெல்லிய கோடு

ஏ.எம்.ஆர் ரமேஷின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் என்றும், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு வி.ஐ.பியின் மரணம் குறித்த திரைப்படம் இது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகை மனிஷா கொய்ராலா ரீ எண்ட்ரி ஆகிறார். மேலும் ஷாம் மற்றும் பெங்களூரை சேர்ந்த அக்ஷா பட் ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்காக சென்னை அருகே ஒரு பெரிய ஃபாரன்சிக் லேப் செட் ஒன்று அதிக பொருட்செலவில் போடப்பட்டு அங்கு அர்ஜூன் மற்றும் ஷாம் சம்பந்தபட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து அர்ஜூன் கூறும்போது, 'தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தான் இதுவரை ஏற்று நடித்திராத கேரக்டர் என்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் கூறியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top