↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐதராபாத்திலிருந்து திருப்பதிக்கு விமானத்தில் புறப்பட்டார் ஸ்ருதி ஹாசன். விமானம் புறப்படும் சமயத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்த ஒரு நபர், விமான பணியாளர்களுக்கு டிமிக்கி கொடுத்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீர் திடீரென சத்தம் போட்டு பேசிய அவர் பேச்சை முடிப்பதாகவும் தெரியவில்லை, சத்தத்தை குறைப்பதாகவும் இல்லை. ' மெதுவாக பேசுங்கள். நீங்கள் பேசுவது தொந்தரவாக இருக்கிறது' என்று ஸ்ருதி சொன்னார். பலமுறை சொல்லியும் அந்த நபர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்த ஸ்ருதி, திடீரென்று கதறவும் புலம்பவும் ஆரம்பித்துவிட்டார்.
அதைப்பார்த்து அருகில் இருந்த மற்ற பயணிகள் ஸ்ருதியை சமாதானம் செய்தார்கள். விமான பணிப்பெண்ணும் ஓடிவந்து அவரிடம் விசாரித்தார். அவர் புலம்பலுக்கான காரணத்தை புரிந்துகொண்ட சக பயணிகள் செல்போனில் சத்தமாக பேசியவரிடம் சத்தத்தை குறைத்து பேசும்படி சொல்ல ஆரம்பித்தனர். பணிப்பெண்கள், செல்போனை சுவிச்ஆப் செய்ய வற்புறுத்தினர். நிலை மோசமாவதை உணர்ந்த அந்த நபர், நைசாக பம்மியதுடன் மறுவார்ததை எதுவும் பேசாமல் கப் சிப் ஆகிவிட்டார். ஸ்ருதியை கதற வைத்த அந்த நபர், ஆந்திராவை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.