↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வை ராஜா வை' படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ள உற்சாகத்தில், படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 24 என படக்குழுவினர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக் நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 'வை ராஜா வை' படத்தின் ரிலீஸுக்கு பின்னர் உடனடியாக அவர் அடுத்து நடிக்கவுள்ள 'இந்திரஜித்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் மகன் கலாபிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக அஷிரிதா ஷெட்டி நடிக்கவுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பில் ஷோபி மாஸ்டரின் நடனப்பயிற்சியில் ஒரு பாடலுக்கு கவுதம் கார்த்திக் வித்தியாசமான டான்ஸ் ஆடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஷங்கர் மகாதேவன்,ஈசன் நூரணி, லாய் மெண்டான்ஷா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து ஏற்கனவே விஸ்வரூபம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top