↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் 8வது சீசனில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் தொடக்க போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதில் இருந்து ஆண்டு தோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8வது ஐ.பி.எல். போட்டி இன்று தொடங்குகிறது. மே மாதம் 24ம் தேதி வரை 47 நாட்கள் இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, விசாகபட்டணம், அகமதாபாத் உள்பட 12 மைதானங்களில் இந்த போட்டி நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் ஆனது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகியுள்ளது. மும்பை 2013ம் ஆண்டு சீசனிலும், ராஜஸ்தான் முதல் சீசனான 2008லும் கோப்பைகளை வென்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் 14 'லீக்' ஆட்டங்களில் மோதும். உள்ளூர், வெளியூர் மைதானங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் விளையாடும் 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
மே 17ம் தேதி வரை 'லீக்' ஆட்டம் நடைபெறும். 'பிளே ஆப்' சுற்று மே 19ம் தேதி தொடங்குகிறது. மே 24ம் தேதி கொல்கத்தாவில் இறுதிப்போட்டி நடக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் சோனி மேக்ஸ், சோனா சிக்ஸ் டெலிவிஷனில் (ஆங்கில வர்ணனை) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் சோனி மேக்ஸ், சோனா சிக்ஸ் டெலிவிஷனில் (ஆங்கில வர்ணனை) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 10 தடவையும், கொல்கத்தா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கொல்கத்தாவில், சுனில் நரைனும், புதிதாக ஏலத்தில் வாங்கப்பட்ட சர்ப்ரைஸ் பேக்கேஜான கரியப்பாவும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங் வீச்சு பிரச்சினையில் இருந்து மீண்ட நரைன் முழு உற்சாகத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்.
Home
»
ipl
»
sports
»
sports.tamil
» ஐபிஎல் 8: முதல் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல், கலக்கபோவது கம்பீரா, ரோகித்தா?
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.