↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
24வது மாடியில் இருந்து குதிக்குமாறு கேப்டன் டோணி கூறினால் அவ்வாறே செய்வேன் என்று பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் கிரிக்கெட் உலக பயணம் கரடுமுரடாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டு நாடு திரும்பினார். தற்போது நலமாக உள்ள அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் உலக பயணம் பற்றி இஷாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2011ம் ஆண்டு நான் உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியில் தேர்வாகவில்லை. 2015ல் நான் தேர்வாக அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனல் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. நான் மிகவும் வருத்தம் அடைந்த நேரத்தில் மஹிபாய்(டோணி) எனக்கு ஆறுதல் கூறினார்.
நீ 24வது மாடியில் இருந்து குதிக்க வேண்டும் என்று கேப்டன் மஹிபாய் கூறினால் நான் சற்றும் யோசிக்காமல் குதிப்பேன். யாருக்குமே காயம் அடைவது பிடிக்காது. ஆனால் என்ன செய்ய முடியும். அதனால் அதை பற்றி கவலைப்பட்டு பயனில்லை.
பந்து வீச எனக்கு மிகவும் பிடிக்கும். சும்மா இருக்கும் நேரங்களில் கூட நான் பந்துவீசி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன். நான் ஒரு நாளில் 10 ஓவருக்கு மேல் பந்து வீசக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நான் 10க்கும் மேற்பட்ட ஓவர்களுக்கு பந்து வீசுகிறேன்.
நான் குணமடைந்துவிட்டதால் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளேன். காயத்தோடு விளையாடுபவன் நான் அல்ல. உலகக் கோப்பை போட்டியை மிஸ் செய்த என்னால் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்க முடியும். உலகக் கோப்பையை விட வேறு எதுவும் பெரியது அல்ல.
இதனை எல்லாம் இந்த ஐபிஎல் போட்டியில் செய்ய வேண்டும் என்று நான் எனக்கு இலக்கை நிர்ணயிப்பது கிடையாது. நிலைமைக்கு ஏற்றவாறு விளையாடுவது தான் நல்லது. நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.
ஹைதராபாத் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். டிரென்ட் பவ்ல்ட், பிரவீன் குமார் இருப்பது எங்களுக்கு பலம். நாங்கள் இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். டேல் ஸ்டெய்ன், புவனேஸ்வர் குமார் என்ன செய்வார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பயிற்சியின்போது கூட புவி சிற்பபாக ஆடி வருகிறார்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
» 'தல' டோணி சொன்னா 24வது மாடியில் இருந்து கூட யோசிக்காம குதிப்பேன்: இஷாந்த் சர்மா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment