தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் மஹிந்தவின் சகோதரர்களில் ஒருவரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை அக்கட்சியின் மூத்த அரசியல் வாதிகளுக்கிடையில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஜனாதிபதித் தோதல் நெருங்கவுள்ள நிலையில் இலங்கை அரசியலில் கட்சித்தாவல், இரகசிய ஒப்பந்தங்கள், பேரம்பேசல்கள் என்பன அதிகரித்துள்ளன. இதன் ஒரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேசாதிரா, சுமந்திரன் ஆகியோர் பொது எதிரணியினருடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்தவின் சகோதரர்களில் ஒருவரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கொழும்பு தாஷ் ஹொட்டலில் கடந்த மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு இவர்களின் ஒருவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பசிலின் அழைப்பிற்கு அமைய இடம்பெற்றுள்ள இச்சந்திப்பில், கட்சித்தாவலுக்கான பேரம்பேசல் நடைபெற்றதாக தகவல் கசிந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விசனத்தை கட்சித் தலைமையிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment