தமிழ் திரையுலகம் என்றால் மலையாள ஹீரோயினை மட்டும் தான் வரவேற்குமா என்ன?, அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன் லால், மமுட்டியும் தமிழில் நம் நடிகர்களுக்கு இணையாக நடித்து வந்தனர். அப்போது தான் அதே மலையாள தமிழுடன் கோகுலம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஜெயராம்.
இவர் கேரளாவில் 1965ம் ஆண்டு பெரம்பாவூரில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே மிமிக்ரியில் ஜாலம் செய்யும் வித்தை அறிந்தவர். இது எப்படியோ அவரை சினிமா வரை கொண்டு சென்றது.
பின் மலையாளத்தில் அபரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சாணக்யன், வசனம், ஜாதகம், ரண்டாம் வவு, மறுபுறம் போன்ற படங்களில் நடித்தார்.
பின் மோகன் லால், மமுட்டி போன்ற நடிகர்களுக்கு கிடைக்கின்ற வரவேற்பு ஜெயராமிற்கும் கிடைக்க ஆரம்பித்தது. உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் ஜெயராம் தான்.
கமலுடன் இவர் தெனாலி, பஞ்சதந்திரம், தற்போது உத்தம வில்லன் வரை நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ஸ் விஜய்யுடன் துப்பாக்கி, அஜித்துடன் ஏகன் போன்ற படத்தில் நடித்துள்ளார்.
காமெடி, கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று நின்று விடாமல் தாம் தூம், சரோஜா போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்று அனைவரையும் மிரட்டினார். இவரின் கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துள்ளது.
0 comments:
Post a Comment