ஆனால் தற்போதைய காலத்தில் ஆண்களும் மேக்-கப்பின் பக்கம் கொஞ்சம் தலை சாய்த்துள்ளனர்.
எனினும் திருமணமாகப் போகும் ஆண்கள் பெண்களுக்கு ஈடாக தங்களை அழகுப்படுத்தி கொள்ள, சில அழகு குறிப்புகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
கண்டிப்பா ஷேவிங் செய்யணும்
பெரும்பாலான ஆண்கள் தங்கள் முகத்தை சவரம் செய்து கொள்ளாமல் திருமணம் நெருங்கும் வேளையிலும் கூட முகமெங்கும் தாடியுடன் திரிகின்றனர்.
ஆனால் முகம் பளபளப்பாக இருக்கின்ற ஆண்களை தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புகின்றனர்.
எனவே கொஞ்சம் முகசவரம் செய்து கொண்டு முகத்தை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
சுரசுரப்பான முகத்திற்கு தீர்வு
கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதை கை, கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
முகம் ஜொலி ஜொலிக்க வழிகள்
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு. சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது.
இதற்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்.
பட்டுப்போன்ற உதட்டுக்கு
ஆண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சாத்தியம் இல்லை. எனவே உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
மேலும் பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.
பளிச்சென்ற பற்களுக்கு
நீங்கள் புகைபிடிப்பது, காபி, டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.
தினமும் இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பற்களை பாதுகாப்பாக வைக்க முடியும்.
வித்தியாசமான ஹெர்ஸ்டைல்
அவ்வப்போது கவர்ச்சிகரமாக முடி வெட்டி கொள்வது தவறில்லை. ஆனால் அதனால் முடி உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
0 comments:
Post a Comment