↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஷால்-லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண், மலையாள நடிகர் லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையப் போவதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது, இந்த செய்தியை நடிகர் விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, லிங்குசாமியும், நானும் இணைந்து பணியாற்றுவது உறுதியானதுதான். லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. படத்தை பற்றிய மேலும் விவரமான செய்திகளை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். 

இப்படம் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திலும் விஷாலுக்கு அப்பாவாக ராஜ்கிரணே நடிக்கவிருக்கிறாராம். முதல் பாகத்தில் வில்லனாக நடித்த லாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம். ஆனால், நாயகி வேடத்திற்கு மட்டும் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த மற்ற விவரங்களை கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top