↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில், டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இவர்களின் மனுவை விசாரித்தால் நிச்சயம் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். காரணம், நீதிபதி தாக்கூர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. சஹாரா இந்தியத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீனே கொடுக்க முடியாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் நீதிபதி டி.எஸ். தாக்கூர் என்பதால் ஜெயலலிதாவின் நிலை இவரிடம் போனால் மேலும் சிக்கலாகும் என்று கூறுகிறார்கள்.
மீண்டும் தவறு செய்த ஜெயலலிதா வக்கீல்கள்..
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த அதே தவறையே மீண்டும் ஜெயலலிதாவின் வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டிலும் செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போதும் அதே தவறு..
தற்போது உச்சநீதிமன்றத்திலும் அதே தவறையே செய்துள்ளனர். அதாவது முதலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி மனு செய்தனர். அதற்கு அடுத்த நாள் மற்ற 3 பேருக்கும் ஜாமீன் கோரியுள்ளனர்.
நான்கும் ஒரே நீதிபதியிடம் விசாரணை...
இந்த நான்கு மனுக்களும், ஒரே வழக்குத் தொடர்பானவை என்பதால் ஒரே பெஞ்ச்சில்தான் விசாரிக்கப்படும்.
நீதிபதி யார்...
இந்த ஜாமீன் மனுக்கள் எந்த நீதிபதியால் விசாரிக்கப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனேகமாக இது நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச்சிடம் விசாரணைக்குப் போகலாம் என்று தெரிகிறது.
அப்படிப் போனால் சிக்கல்தான்..
நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச்சிடம் இந்த வழக்கு விசாரணைக்குப் போனால் பெரும் சிக்கல் என்று இப்போதே பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மிகவும் கண்டிப்பான நீதிபதி..
நீதிபதி டி.எஸ். தாக்கூர், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார். இவர் மிகவும் கண்டிப்பானவரும் கூட.
சுப்ரதா ராய் பட்ட பாடு
இப்படித்தான் பெரும் மோசடி வழக்கில் கைதான சஹாரா இந்தியா தலைவர் சுப்ரதா ராய், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை தாக்கூர் தலைமையிலான பெஞ்ச்ததான் விசாரித்தது.
ஜாமீனே கிடையாது..
ராயின் மனுவை விசாரித்த நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச், ஜாமீன் தர முடியாது என்று கூறி விட்டது. ராய் எப்படியெல்லாமோ போராடிப் பார்த்தார். ஆனால் அவருக்கு ஜாமீனே கிடைக்கவில்லை.
ஜெ.வுக்கும் சிக்கல் வருமா..
எனவே நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் முன்பு ஜெயலலிதாவின் மனு விசாரணைக்குப் போனால், அவருக்கும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய டி.எஸ். தாக்கூர்..
நீதிபதி டி.எஸ். தாக்கூர் கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் முன்பு பணியாற்றியுள்ளார். 1972ம் ஆண்டு முதல் சட்டப் பணியில் ஈடுபட்டு வருகிறார் நீதிபதி தாக்கூர். இவரது தந்தை டி.டி. தாக்கூரும் மிகப் பெரிய வக்கீலாக இருந்து பின்னர் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
தந்தை வழியில் நீதிபதியானவர்..
சிவில், கிரிமினல், அரசியலமைப்புச் சட்டம், வரி விதிப்பு, சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வக்கீலாக திகழ்ந்தவர் டி.எஸ். தாக்கூர். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் முன்பு பணியாற்றியுள்ளார். பின்னர் 1994ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உயர்ந்தார். அதன் பின்னர் அவர் 1994 மார்ச் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் 1995ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக மாற்றப்பட்டார். 2004ம் ஆண்டு அவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். 2009ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2017ம் ஆண்டு வரை உள்ளது.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» சுப்ரதா ராயும், ஜெயலலிதா ஜாமீன் மனுவும்... ஒரு திகில் எதிர்பார்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment