ஜெயலலிதா சிறையில் இருந்தாலும் தைரியத்தை இழக்காமல் உள்ளதாக சிறைத் துறை உயர் அதிகாரி ஜெயசிம்மா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவரை சந்திக்க சிறைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமான அதிமுகவினர் வந்தாலும் அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை.
தனது வழக்கறிஞர்கள் குழுவை மட்டுமே ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறுகையில், நான் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரை பார்த்தது இல்லை. சிறையில் ரவுண்ட்ஸ் செல்கையில் தான் அவரை பார்த்துள்ளேன். அவர் நலமாக உள்ளார். சிறையில் இருப்பதால் அவர் தைரியத்தை இழந்துவிடவில்லை. அவர் சிறை உணவு தவிர வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
0 comments:
Post a Comment