↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இவ்வருடம் ஏப்பிரல் 2 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் ஏப்பிரல் 3 ஆம் திகதி அமெரிக்காவிலும் உலகெங்கும் 3D இல் வெளியிடப் பட்ட Fast and Furious 7 திரைப்படம் 2015 ஆம் ஆண்டுக்கான ஹாலிவுட்டின் மிகப் பெரிய ஆப்பனிங் வசூல் செய்து சாதனை படைக்கவுள்ளது.
உலகம் முழுதும் சுமார் 810 IMAX தியேட்டர்களில் 3D இல் வெளியிடப் பட்ட இத்திரைப் படம் வட அமெரிக்காவில் மட்டும் இவ்வார இறுதிக்குள் அதாவது இன்று ஞாயிறு இரவுக்குள் ஆப்பனிங்காக $150 மில்லியன் டாலர்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஈட்டி சாதனை படைக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

கடந்த வாரம் இத்திரைப் படம் சுமார் $115 அல்லது $125 மில்லியன் டாலர்களே ஈட்டும் எனக் கணிக்கப் பட்டிருந்த போதும் தற்போது இது $150 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் கேப்டன் அமெரிக்காவின் 2 ஆம் பாகம் பாக்ஸ் ஆஃபீஸ் ஆப்பனிங்காக $95 மில்லியன் வசூலித்ததே இதற்கு முன் மிகப் பெரிய ஏப்பிரல் வசூலாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு முதல் இதுவரை வெளியான Fast and Furious அனைத்துத் திரைப்படங்களும் சுமார் $2.4 பில்லியன் டாலர்கள் இதுவரை உலகளாவிய ரீதியில் வசூலித்துள்ளன.

இத்தொடரின் இறுதிப் பாகமான Furious 7 படப் பிடிப்பில் இருந்த போது இதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்த பிரபல நடிகரான போல் வால்க்கெர் 2013 ஆம் ஆண்டு ஒர் கார் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து இதன் படப்பிடிப்பு சற்றுத் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை வெளியான அனைத்து Furious திரைப்பட வரிசைகளிலும் மிகப் பெரிய ஆப்பனிங்காகவும் மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளைக் கொண்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற படமாகவும் Furious 7 சாதனை படைத்துள்ளது. கிறிஸ் மோகனால் எழுதப் பட்டு ஜேம்ஸ் வான் இனால் இயக்கப் பட்ட இத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் நடிகரான ஜேசன் ஸ்டதாம் அதிரடி வில்லனாகக் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top