↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய வீரர் விராட் கோஹ்லி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அவரது காதலியான அனுஷ்கா சர்மா சரமாரியாக அட்வைஸ் செய்துள்ளார்.
கடந்த சில சில வருடங்களாக விராட் கோஹ்லியையும், அவரது காதலியான அனுஷ்கா சர்மாவையும் ஊடகங்கள் பின் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அனுஷ்கா சர்மா நடித்த NH10 என்ற படம் வெளிவந்தது.
அதன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அனுஷ்கா சர்மாவிடம் கோஹ்லி பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, படத்தை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் என்று அவர் கூறியும், அந்த பெண் பத்திரிக்கையாளர் மீண்டும் சுற்றி வளைத்து கோஹ்லி பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
இதனால் கடுப்பாகி போன அனுஷ்கா சர்மா, அந்த பெண் பத்திரிக்கையாளருக்கு சரிமாரியாக அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்.
இதனையடுத்து விழிபிதுங்கிய நிலையில் அந்த பத்திரிக்கையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார்.
இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top