கடந்த 1994ம் ஆண்டு ஏப்ரல் முதல் யூலை மாதம் வரை நடைபெற்ற உள்நாட்டு போரில் சுமார் ஒரு கோடி மக்கள் கொல்லப்பட்டனர். மரணமடைந்தவர்களில் துட்சி(Tutsi) சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையினர்களே அதிகம்.
போரில் பங்கேற்ற Claude Muhayimana என்பவர் ருவாண்டா நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் Rouen நகரில் வசித்து வந்த அந்த நபரை பிரான்ஸ் பொலிசார் கடந்த 2013ம் ஆண்டில் கைது செய்தனர்.
இந்நிலையில், யுத்தம் நடந்தபோது Kibuye பகுதியில் உள்ள தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற காரணத்திற்காக Claude Muhayimana-வை ருவாண்டா நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால், யுத்தத்திற்கு காரணமானவர்களின் பட்டியலில் அந்த நபரின் பெயர் இல்லாததால் அவரை ருவாண்டா அரசிடம் ஒப்படைக்க பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்தனர்.
இந்த வழக்கு கடந்த வெள்ளியன்று பாரீஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, Claude Muhayimana மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞரான Philippe Meilhac கூறுகையில், ருவாண்டா அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அவர் மறுத்துள்ளார்.
மேலும், யுத்தம் நடைபெற்ற சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற தான் அவர் முயற்சி செய்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், அடுத்த வாரத்தின் இறுதிக்குள் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment