↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  அனுஷ்காவுக்கு போட்டியாக வரும் உசர நடிகை

5 அடி 9 அங்குள உயரத்தில் கோலிவுட், டோலிவுட்டை கலக்கிக்கொண்டிருப்பவர் அனுஷ்கா. தன்னைவிட உயரமான ஹீரோ, உயரம் குறைந்த ஹீரோக்களுடன் ஹீல்ஸ் செருப்பு அணிந்தும், செருப்பு அணியாமல் வெறும் காலுடனும் நடித்து இதுவரை சமாளித்துவிட்டார். அவருக்கு போட்டியாக  5 அடி 8 அங்குள உயரத்தில் நடிக்க வந்திருக்கிறார் கிரித்தி சனோன். இந்தியில் தில்வாலே, ஹீரோபந்தி படங்களில் நடித்த இவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக 'நேனொக்கடய்னே' படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் தமிழில் டப்பிங் ஆகி வரவுள்ளது. தற்போது சுதீர்வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கில் நடித்து வருகிறார். கிரித்தியைவிட நாக சைதன்யா உயரம் குறைவு.

தன்னைவிட உயரம் குறைந்த நாக சைதன்யாவுடன் நடிப்பதுபற்றி கிரித்தி கூறும்போது,‘ஷூட்டிங்கின்போது எனது உயரம் ஒரு பிரச்னையே கிடையாது. உண்மையில் நாக சைதன்யா இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. அவர் கூலாக நடித்துவிட்டு செல்கிறார். நாங்கள் எங்கள் வேலையை பற்றி பேசிக்கொள்வதோடு ஜாலியாக ஒருவரையொருவர் தொங்கலில்விட்டு கமென்ட் அடித்துக்கொள்வோம். இணைய தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை பார்த்து ரசிப்போம்‘ என்றார்.  உயரமான நடிகையுடன் நடிப்பது பற்றி நாக சைதன்யாவிடம் கேட்டபோது,‘ஆம், கிர்த்தி என்னைவிட உயரம் அதிகம். அதில் என்னவிருக்கிறது? இரண்டு பேர் நட்பாக பழகுவதற்கோ அல்லது காதல் கொள்வதற்கோ உயரம் ஒன்றும் தடை கிடையாது' என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top