↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கேப்டன் டிவியில் அல்ல மாறாக கே டி.வி.யில் தான் விஜயகாந்த் நடித்த படங்கள் அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றது. கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களுக்கு அவர் நடத்தும் கேப்டன் டிவியை விட கே டிவி தான் பிடிக்கும் என்று கூறலாம். அந்த அளவுக்கு கே டிவியில் தான் விஜயகாந்த் நடித்த படங்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன. தினமும் இரவு 7 மணிக்கு கே டிவியில் சூப்பர் ஹிட் இரவுக் காட்சி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். அந்த சூப்பர் ஹிட் இரவுக் காட்சியில் விஜயகாந்த் நடித்த படங்களை திரும்பத் திரும்ப போடுகிறார்கள்.

விஜயகாந்த் நடித்ததில் எத்தனையோ ஹிட் படங்கள் உள்ளன. ஆனால் கே டிவியில் அவர் நடித்த சுதேசி, சபரி, பேரரசு, தென்னவன், தர்மபுரி, நரசிம்மா ஆகிய படங்களையே அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். சிம்மா, நரசிம்மா என்று விஜயகாந்த் அடிக்கடி கூறும் வசனங்களை கே டிவியை பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதற்கிடையே பெரியண்ணா, எங்கள் அண்ணா ஆகிய படங்களையும் அவ்வப்போது ஒளிபரப்புகிறார்கள். அதில் எங்கள் அண்ணா படத்தை அடிக்கடி கே டிவியில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top