↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உத்ரா இவர் பிரபல பின்னணி பாடகரான உன்னிகிருஷ்ணன் அவர்களின் மகள். இவர் எற்கனவே இயக்குனர் விஜய் இயக்கத்தில் “சைவம்” படத்தில் “அழகே அழகு” என்ற ஒரு பாடலை பாடியிருந்தார். இப்பாடலுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படாலனாது தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் அவர் படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளாரம் உத்ரா. விஜய் தற்போது “புலி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குகிறார் சிம்புதேவன்.

இப்படமானது தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. இதற்கு பின் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இப்படமானது விஜயின் 59 வது படமாகிறது. இப்படத்தின் ஒரு துள்ளலான பாடலைத்தான் பாடப்போகிறார் உத்ரா. இது குறித்து உத்ரா அவர்கள் கூறுகையில் தான் விஜய்யின் மிக தீவிர ரசிகை என கூறினார். அதனால் இப்பாடலை உற்சாகமாக பாடுவார் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top