↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பெரிய ஸ்டார்களின் படங்கள் அனைத்துமே தற்போது தமிழில் வெளியாகும் அதே தினத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளும் ரிலீஸாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான 'ஐ' படம் உள்பட அனைத்து தமிழ் படங்களும் இவ்வாறே ரிலீஸாகியிருந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸான 'அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் ஐதராபாத் நகரில் ரிலீஸாகவில்லை என்ற தகவல் ஐதராபாத் அஜீத் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரபல இணையதளம் ஒன்றில் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தை முன்பதிவு செய்ய அஜீத் ரசிகர்கள் முயற்சி செய்தபோதுதான் ஐதராபாத்தில் நேற்று படம் ரிலீஸாகவில்லை என்பதை அவர்கள் அறிந்தனர். இந்த படம் அங்கு அடுத்த வாரம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மும்பை, புனே உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் 'என்னை அறிந்தால்' நேற்று ரிலீஸாகி ரசிகர்களை திருப்திபடுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top