வாட்டிகன் நகரில் (Vatican City) போப் ஆண்டவர் வாரந்தோறும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்பது வழக்கமாகும்.
இந்நிலையில், இந்த வாரம் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில் தன்னுடைய குழந்தையை அடித்தேன் என்றும், குழந்தையை அவமானப்படுத்தும் நோக்கில் இதுவரை முகத்தில் அறைந்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இச்செயலை வரவேற்று கருத்து கூறிய போப், ‘குழந்தையின் ஒழுக்கத்தை பேணும் வகையில், குழந்தையை அடித்தது சரியானதே என்றும், அவருடைய செயல் பாராட்டக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவரின் இந்த கருத்திற்கு ஜேர்மனியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜேர்மனியின் குடும்ப நல அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வெரீனா ஹெர்ப்(Verena Herb), குழந்தைகளை அடிப்பதில் மரியாதை சார்ந்தது, மரியாதை சாராதது என வேறுபாடுகள் இல்லை என்றும், குழந்தைகள் மீதான எந்த வகையான துன்புறுத்தலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைகள் மீதான உடல்ரீதியான தண்டனைக்கு எதிரான சர்வதேச அமைப்பு (Global Initiative to End All Corporal Punishment of Children) போப் ஆண்டவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வேறு மத நம்பிக்கை உடையவர்கள் குழந்தைகள் மீதான தண்டனைகளை தடை செய்ய முயற்சிக்கும்போது, போப் ஆண்டவரின் இந்த கருத்து ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிற நபர்களை போல் சட்டத்தின் முன் குழந்தைகளுக்கும் சமமான உரிமைகள், சுய மரியாதை, பாதுகாப்பு உரிமைகள் உள்ளது என அந்த அமைப்பை சேர்ந்த அதிகாரி பீட்டர் நீவெல் (Peter Newell) தெரிவித்துள்ளார்.
மேலும், ஜேர்மனி மற்றும் போப் ஆண்டவரின் தாய்நாடான அர்ஜெண்டினா உள்பட 44 நாடுகள் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்களை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment