↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணித்தலைவர் டோனி தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெர்ஷிய மொழியிலான அழகான பெயரை சூட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டோனியின் மனைவி ஷாக்ஷிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷீபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெர்ஷிய மொழியில் ஷீபா என்றால் அழகு என்று அர்த்தமாம்.
தற்போது உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக டோனி அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். டோனிக்கு குழந்தை பிறந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் டோனி மற்றும் சக வீரர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
அப்போது சக வீரர்களிடேயே இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். தனது மனைவி ஷாக்ஷிக்கு இந்த பெயர் மிகவும் பிடித்திருந்ததாகவும், அதனால் அதையே சூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top