* கடந்த 1996ம் ஆண்டு கென்யத் தலைநகர் நைரேபியில் இலங்கைக்கு எதிரான நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக இளம் வீரர் சாகித் அப்ரிடி களமிறங்கினார். அந்தப் போட்டியில் விளையாட அவருக்கென்று பிரத்யேக மட்டை இல்லை.
அந்த சமயத்தில் சச்சின் பயன்படுத்திய மட்டை ஒன்றை பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், சாகித் அப்ரிடிக்கு வழங்கினார். இந்த மட்டையை கொண்டு விளையாடிய சாகித் அப்ரிடி, 37 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார்.
* கடந்த 2012ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். 137 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் முதல் பந்தில் சிக்சர் அடித்தது இல்லை.
* கடந்த 1960ம் ஆண்டு மும்பை பிராபோன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய -அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அவர் 50வது ஓட்டங்கள் அடித்த போது, மைதானத்திற்குள் புகுந்த இளம் ரசிகை ஒருவர் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார். மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் அப்பாஸ் அலி ஆவார்.
* இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 8-6-63 பிறந்தார். அது என்னவோ.. டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ஓட்டங்களின் எண்ணிக்கையும் 8663 தான்.
0 comments:
Post a Comment