தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரை பாராட்டுவது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் தற்போதுள்ள இயக்குனர்களின் வசந்தபாலன் அவர்கள் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார்.
என்னை அறிந்தால் படத்தை பார்த்த வசந்தபாலன் தன் பேஸ்புக் பக்கத்தில் ’என்னை அறிந்தால் பார்த்தேன். பிடித்திருந்தது. கௌதம் தனக்கென ஒரு திரைமொழி வைத்துள்ளார் அது தரும் கவர்ச்சி..ரம்மியமானது.
அழகான ஆங்கிலம், அழகான உரைநடை, கவிதையான தமிழ் உலவும் வசனம் பிரத்யேகமாக கௌதமின் ஸ்பெஷல். த்ரிஷா, அஜித் அத்தனை அழகு. ஒளிப்பதிவு அத்தனை உயர்தரம்.
அஜீத் படத்தின் கிளைமாக்ஸ் நடக்கும் இடம் ஒரு வீட்டினுள் .... மற்ற கமர்சியல் படங்களில் இருந்து கௌதம் படம் வேறுபடுவதற்கு அது ஒரு காரணம். வேறு படங்களாக இருந்தால் கதாநாயகி ஒரு பள்ளிக்கூட மாணவியாகவோ கல்லூரி மாணவியாகவோ இருப்பார் அவரை ஹீரோ துரத்தி துரத்தி காதலிப்பார்.
கௌதம் படத்தில் ஹீரோ ஒரு டைவர்ஸ் ஆன பெண்ணை ஒரு ஆசிரியை ஒரு குழந்தையுடன் உள்ள இளம் அம்மாவை காதலிப்பது திருமணம் செய்து கொள்ளப்போவது அழகாக உள்ளது. தொடர்ந்து ஓரே விதமான போலீஸ் படங்களை எடுப்பது தான் ஒரு சலிப்பாக உள்ளது. மற்றபடி படம் ஒரு உயர்மட்ட ரசனைக்குரியது வாழ்த்துக்கள் கௌதம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment