↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியாவில் ஆப்பரா (Opera) பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குவதாக, நார்வே நாட்டைச் சார்ந்த ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற மாதம் இது 5 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த அளவிற்கு அதீத வளர்ச்சிக்கு, ஸ்மார்ட் போன்களின் பெருக்கமே காரணம். நம்பமுடியாத அளவிற்கு, இந்தியா தங்கள் நிறுவனத்திற்கு நல்ல இடத்தைத் தந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை, அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டமொபைல் அப்ளிகேஷன்களில், ஆப்பரா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. பன்னாட்டளவில் இயங்கும் ஜிமெயில் சாதனத்தைக் காட்டிலும், ஆப்பரா பிரவுசர் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பரா பிரவுசர், பைல்களைத் தரவிறக்கம் செய்கையில், டேட்டாவினை கம்ப்ரெஸ் செய்து தருவதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும், அதனால், வாடிக்கையாளர்களுக்குப் பணச் செலவு குறைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு இணையச் சந்தை பொருளாதார அடிப்படையில் இயங்குவதால், குறைந்த நேரத்தில் தரவிறக்கம் செய்திடும் பணியைச் செவ்வனே செய்து தரும் ஆப்பரா பிரவுசரை அனைவரும் விரும்புகின்றனர்.

உலக அளவில், ஆண்ட்ராய்ட் போன்கள் மிக வேகமாகச் சந்தைப்படுத்தப்படும் நாடுகளை எடுத்துக் கொண்டால், அவற்றில் முதல் ஐந்து இடங்களில், ஆப்பரா இடம் பெறும். அதி வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், எந்த அளவிற்கு ஆப்பரா இடம் பெற்றுள்ளது என்பதனை இந்த தகவல் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதே போல வளர்ச்சியை ஆப்பரா பெற்று வருகிறது. இங்கு விற்பனை செய்திடும் போன்களில், ஆப்பரா பிரவுசர் பதிவு செய்யப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top