உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அது கடினமான விடயமாக இருக்கும்.
அதனால் உடல் எடையை குறைக்கும் விலை குறைந்த உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு, வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து ஸ்லிம்மான தோற்றம் கிடைக்கும்.
சிறுதானியங்கள்
சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை அதிகம் எடுத்து வந்ததால் உடல் பருமன் பிரச்சனை வராது.

மோர்
மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தேன்
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.

பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.

மாட்டுப்பால்
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, தொப்பையும் வருகிறது. எனவே அதற்கு பதிலாக மாட்டுப் பாலை குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பிட்டாகவும் இருக்கும்.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

பூண்டு
பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.

காளான்
காளான் கூட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த, தொப்பையைக் குறைக்க உதவும் சிறப்பான ஒரு இந்திய உணவுப் பொருள். அதிலும் பட்டன் காளான் தான் கொழுப்புக்களை கரைப்பதில் சிறந்தது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.