↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் முரளி விஜய் (99), விராட் கோஹ்லி (141) ஆட்டத்தால் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால், இந்திய வீரர்களின் தவறாலும், நடுவர்கள் செய்த தவறாலும் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆட்டத்தின் 5வது ஓவரில், ஜான்சன் வீசிய `ஷார்ட் பிட்ச்’ பந்து ஷிகர் தவானின் வலது தோள் பகுதியில் பட்டு சென்றது.
இதனை பிடித்த விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் `அவுட்’ கேட்டார். அப்போது அம்பயராக இருந்த இங்கிலாந்தின் இயான் கோல்டு தவறாக `அவுட்’ வழங்கினார்.
பின், லயன் வீசிய 70வது ஓவரின் கடைசி பந்தை ரஹானே அடித்தார். கால் `பேடில்’ பட்டு சென்ற பந்தை ரோஜர்ஸ் பிடித்து வீணாக ‘அவுட்’ கேட்டார். நடுவர் எராஸ்மஸ் `அவுட்’ கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

ரீப்ளேயில் பந்து மட்டையில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. முக்கியமான கட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு இந்தியாவின் வெற்றிக்கு தடையாக அமைந்தது.
நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) செய்யும் முறை இத்தொடரில் இல்லாதது அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.

முரளி விஜய்யின் தடுமாற்றம்:-
விஜய் பொறுமையாக விளையாடி 99 ஓட்டங்கள் எடுத்தார். 95 ஓட்டங்களில் இருந்து அவர் பவுண்டரி மூலம் 99 ஓட்டங்களை தொட்டார். ஆனால் அதன் பின் ஒரு ஓட்டம் எடுக்க விஜய் அதிக அளவில் திணறினார்.
ஒருவித பதற்றத்துடன் விளையாடினார். இதனாலேயே 233 பந்துகள் சந்தித்த அவர் 234வது பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களுக்கு 99 ஓட்டங்கள் இருக்கும்போது மனநிலையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது.

போராடத் தவறிய கோஹ்லி:-
82து ஓவரை லயன் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் கோஹ்லி ஆட்டமிழந்தார். ஷாட் பிட்ச் ஆக வந்த பந்தை லாங் மிட் விக்கெட் நோக்கி தூக்கி அடித்தார். ஆனால், அது கேட்ச் ஆக மாறியது. பொறுப்பான நிலையில் விளையாடிய கோஹ்லி அந்த பந்தை தூக்கி அடித்திருக்கக்கூடாது. கடைசி வரை அவர் நிலைத்து நின்று போராடியிருக்க வேண்டும்.

ரோஹித் செய்த தவறு:-
ரோஹித் சர்மா முதல் முதல் இன்னிங்ஸில் எவ்வாறு தவறு செய்தாரோ அதேபோல் 2வது இன்னிங்ஸிலும் ஆப்சைடுக்கு வெளியே வந்த பந்தை முன்னால் சென்று தடுத்து விளையாடினார். ஆனால் பந்து கையுறையில் பட்டு லெக் சைடு ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனது. அவர் அந்த பந்தை பின்னால் சென்று விளையாடி இருக்கலாம்.

ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் தான் இருந்தது. இந்தியா வெற்றிக்கு 86 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது கோஹ்லியுடன் சகா களத்தில் இருந்தார்.
இந்த இருவரும் களத்தில் நிற்கும்போது 80வது ஓவரை லயன் வீச வந்தார். இந்த ஓவருக்குப் பின் புதிய பந்தை எடுக்க அவுஸ்திரேலியா முடிவு செய்திருந்தது. ஆனால், சகா 80வது ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். இதனால், அவுஸ்திரேலியா புதிய பந்தை எடுக்கும் முயற்சியை கைவிட்டது.

கவிழ்த்து விட்ட சுழற்பந்து வீச்சு:-
ஆடுகளம் 4 மற்றும் 5வது நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. லயன் ஆப் ஸ்பின் பந்து வீச்சு என்பதால் அவரை எதிர்கொள்ள பின்னால் வந்து விளையாடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பொதுவாக இந்திய வீரர்கள் சுழற்பந்தை எளிதாக எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஆப் ஸ்பின்னை பின்னால் வந்து (Back Foot) விளையாடுவதில் சிறந்தவர்கள்.

தற்போது இருக்கும் இளம் வீரர்களில் கோஹ்லியை தவிர, மற்ற வீரர்களுக்கு பின்னால் வந்து விளையாட (Back Foot) தெரியவில்லை. இதை இந்திய வீரர்கள் சரியாகச் செய்யாததால் தான் இந்தியா தோற்றது. இந்த தவறை இளம் வீரர்கள் திருத்திக் கொள்ளாவிட்டால், இனி வரும் போட்டிகளும் மோசமானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top