↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திமுக தலைவர் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் 2.65 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் கருணாநிதியின் பேஸ்புக் பக்கம், பிற அரசியல் வாதிகளின் பக்கங்களை விட சுறுசுறுப்பாக காணப்படுவது ஆச்சரியமான விஷயம்தான். பொழுதுபோக்கு சமாச்சாரமாக கருதப்பட்ட சமூக வலைதளப் பக்கம் மெல்ல மெல்ல கருத்துச் சுதந்திரத்திற்கான களமாகியது. செல்போனில் சமூகவலைதளப் பக்கங்களை பயன் படுத்தும் வசதி வந்த பிறகு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதும் இதற்கு ஒரு காரணம். மக்களிடம் சமூக வலைதளப் பக்கங்களின் ஆதரவு அதிகரித்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக சமூக வலைதளப் பக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கின. தற்போது பெரும்பான்மையான கட்சிகள் தங்களது முகநூல் பக்கத்தின் வாயிலாக மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுகத் தலைவர் கருணாநிதி தனது முகநோல் பக்கத்தில் மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் ( Kalaignar Karunanidhi ) என்பது ஆகும். இது நேற்று மதிய நிலவரப்படி 2 லட்சத்து 62 ஆயிரத்து 192 லைக்குகளையும், முகநூலின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரமான வெரிபைட் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.


இதேபோல், அவரது டுவிட்டர் பக்கம் 28 ஆயிரத்து 700 பாலோயர்களைக் கொண்டு செயல்படுகிறது. கட்சியின் அறிக்கைகள், பங்கேற்கும் கூட்டக்கள், பேச்சு, தொண்டர்களுக்கான கடிதம், முக்கிய அறிவிப்பு மற்றும் அரிய புகைப்படங்களும் உடனுக்குடன் இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கருணாநிதியின் பக்கத்தைக் கவனிப்பதற்காக தனி டீமே உள்ளது. கருணாநிதியிடம் இருப்பதால் இவர்களும் சுயமாகவே சுறுசுறுப்புப் புலிகளாக இருக்க வேண்டிய நிலை. மகள் கனிமொழியும், உதவியாளர் நித்யாவும் கருணாநிதியின் பக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவிகரமாக இருக்கிறார்களாம்.

அதேபோல், தொழில்நுட்ப ரீதியான அவரது சமூகவலைதள செயல்பாட்டிற்கு நவீன் நரேந்திரன் மற்றும் சுரேஷ் இமானுவேல் என்ற இளைஞர்கள் உதவுகிறார்கள். இவர்கள், அமெரிக்காவில் ஒபாமாவின் சமூக வலைதளத் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திய நிபுணர் சிவா அய்யாபிள்ளை என்ற தமிழரின் எக்கோ மெய்யில் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

தனது தள்ளாத வயதிலும் தினமும் துள்ளலோடு முகநூல் பக்கத்தில் உலவும் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ளார்.

தொண்டர்களின் பெரும்பாலான கமெண்ட்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே போடப்படுவது கருணாநிதி பக்கத்தின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது. நிறையப் பேர் கருணாநிதியை கலாய்ப்பதைக் கூட அவர்கள் நீக்குவதில்லை. கருணாநிதியே வலைதளத்தைப் பயன்படுத்துவதால், அவரது கட்சியினர் பலர் ஸ்மார்ட்போனுக்கு மாறியுள்ளனராம். உலக நிகழ்வுகளில் கருத்தைத் தெரிவிக்கும் கருணாநிதி ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து மட்டும் இதுவரை எந்தப் பதிவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top