↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி, தமிழக மீனவர்கள் படகு குறித்து தெரிவித்த கருத்தால் அவரிடம் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நான்தான் ஆலோசனை கூறினேன்.. அதன்படியே ராஜபக்சேவும் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியிடம் ரூ100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் கே.சி.குப்பன், எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், கைப்பற்றியும் வருகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அரசிடம் தான் கூறிய பின்னர், அந்நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகவும், கைப்பற்றுவதாகவும் தெரிவித்தார். எனவே, இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடியை சுப்பிரமணியன் சுவாமி தருவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Home
»
news
»
news.india
» சுப்பிரமணியன் சுவாமியிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சென்னை கோர்ட்டில் மனு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment