↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad புலி, கங்காரு, எலி... தலைப்புக்கு தவிக்கும் கோலிவுட்

கோலிவுட்டில் ஐ, உ, ரு என ஒரு எழுத்தில் டைட்டில் வைக்கும் பாணியும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காதலில் சொதப்புவது எப்படி என டைட்டில் வைப்பதும் டிரெண்டாக இருந்தது. தற்போது விலங்குகளின் பெயர்களை தலைப்பாக்கி வருகிறார்கள்.
விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு ' புலி '  என பெயரிடப்பட்டிருக்கிறது. சிம்புதேவன் டைரக்ஷன் செய்கிறார். விஷால் தான் நடிக்கும் புதிய படத்துக்கு ' பாயும் புலி'  என பெயரிட்டிருக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயின். சுசீந்திரன் இயக்குகிறார். உயிர், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்கும் படம் ‘கங்காரு‘. அர்ஜுனா, பிரியங்கா நடிக்கின்றனர். வடிவேலு நடிக்கும் புதிய படத்துக்கு ' எலி'  என பெயரிடப்பட்டிருக்கிறது.

யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஹீரோயினாக சதா நடிக்கிறார். விமல், அஞ்சலி, சூரி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மாப்ளே சிங்கம்‘ என பெயரிட்டுள்ளனர். ராஜசேகர் இயக்குகிறார்.  பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ' பாம்பு சட்டை' . ஆதம் தாசன் இயக்குகிறார். ஜீவன், டிம்பிள் நடிக்கும் படம் ‘ஜெயிக்கற குதிர‘. சக்தி சிதம்பரம் இயக்குகிறார். நல்ல தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் விலங்குகள் பெயர்களையெல்லாம் படத்துக்கு தலைப்பாக்கி வருகிறார்கள். இயக்குனர்களிடம் கற்பனை வளம் குறைந்து வருவதே இதற்கு காரணம் என சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top