↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி என தெரிவதில்லை. அது அனைத்தும் கலந்த ஒரு கலவை என அவர்கள் அறிவதில்லை.
கசப்புப் பிடிக்காது என்றால் பின் உடல் எப்படி குணமாகும். அதுப் போல தான் காதலும். சண்டை, பிரச்சனை, வலி இதெல்லாம் வேண்டாம் முத்தமும், மொத்தமும் இன்பம் மட்டுமே வேண்டும் எனில் இங்கு யாரும் காதல் கொள்ள இயலாது. ஒருவேளை அப்படி ஒரு உறவு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது காதலாக இருக்காது. காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். அப்படி ஏற்படும் அந்த மாற்றங்களில் நன்மைகள் அதிகமா இல்லை, தீமைகள் அதிகமா என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்...
காதல் பிரிவிற்கு பின் இணையும் காதல் ஜோடிகளில் புரிதல் அதிகம் இருக்கும். மீண்டும் ஒரு புரிதலற்ற காரணத்தினால் பிரிந்துவிட கூடாது என கவனமாக இருப்பார்கள்.
"என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.." என்பது போல சொந்தம் கொண்டாடுதல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆண்களை விட பெண்கள் மிகவும் அன்யோன்யம் ஆகிவிடுவார்கள்.
காதலில் ஒரு முதிர்ச்சி ஏற்படும். எதையும் யோசித்து முடிவெடுக்கும் பழக்கம் அதிகரிக்கும். இந்த முதிர்ச்சி பல சண்டைகள் ஏற்படாது தடுக்கும்.
புரிதல் மற்றும் முதிர்ச்சியின் பிள்ளையாய் உங்கள் காதலில் அக்கறை அதிகரிக்கும். மீண்டும் ஒரு பிரிவை ஏற்க மனம் தயாராக இருக்காது. முன் ஏற்பட்ட காயத்தை இந்த அக்கறை எனும் மருந்து மிக வேகமாக ஆற்றும்.
மிஞ்சுதலை விட, கொஞ்சுதல் அதிகரிக்கும். முதிர்ச்சியின் காரணமாய் எல்லை மீறல்கள் இல்லாத மெய் காதல் வெளிப்படும். இது உங்கள் காதலின் அஸ்திவாரத்தை வலுவாக்கும்.
நன்மைகள் போலவே தீமைகளும் இருக்கிறது, சின்ன சின்ன விஷயங்களில், "அன்று நீ அப்படி செய்துவிட்டு போனவன் தானே" என்று சொல்லிக் காட்டும் குணம் எட்டிப்பார்க்கும்.
ஒவ்வொரு உறவையும் கொள்ளும் நச்சு தான் சந்தேகம். எந்த காரணத்தினால் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தீர்களோ அது அவ்வப்போது மனதை அரிக்கும். இப்போதும் அவன் அவ்வாறு தான் இருக்கிறானா? அவள் மாறியிருக்க மாட்டாளோ? என சந்தேகம் மனதினுள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.
சொல்லிக் காட்டுதல், சந்தேகம் இந்த இரண்டு தீமைகளை வென்றுவிட்டீர்கள் என்றால் உங்கள் காதல், மனதில் இருந்து திருமணத்திற்கு செல்ல எந்த தடையும் இருக்காது.
Recent Posts
உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா?
ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான[...]
இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!
ஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவற[...]
பெண்களை விட ஆண்களுக்குத்தான் அந்த நினைப்பு அதிகமாம்!
செக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வ[...]
உடலுறவில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்!!!
சிலருக்கு ஆற்றில் எத்தனை முறை குளித்தாலும் மீண்டும் மீண்டும் குளிக்க தோன்றும். அவ்வாறானது தான் [...]
பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்… உங்களுக்குத் தெரியுமா?
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.