↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


எனது கணவர் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் சிலருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி தொந்தரவு செய்வார்கள். அரசியல்வாதிகளின் செல்போன் அழைப்பு தான் அதிகம் வரும். இரவிலும் அழைப்புகள் வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்று கூறியுள்ளார் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் நேருவின் மனைவி. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அதிகாரியாக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் டாக்டர் நேரு. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவந்த அவர் 2 மாதங்களுக்கு முன்பு தான் அங்கு இருந்து பணிமாறுதலில் திருச்சி வந்தார். 

பொறுப்பு அதிகாரியாக இருந்தாலும் அவரையே தொடர்ந்து இருப்பிட மருத்துவ அதிகாரி பணியை கவனிக்கும்படி உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. உயர் அதிகாரிகள் அதிகம் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சிலருக்கு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க கூறும்படி டாக்டர் நேருவை தொடர்பு கொண்டு உயர்அதிகாரிகள் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். அரசியல்வாதிகளும் தங்களது கட்சிக்காரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி அவ்வப்போது நேருவுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். இரவு நேரங்களில் திடீரென மருத்துவமனைக்கு வருமாறும் அதிகாரிகள் தொந்தரவு செய்துள்ளனர். 

அடிக்கடி மருத்துவ முகாம்களுக்கும் பணி ஒதுக்கி அலைக்கழித்துள்ளனர். உதவி பேராசிரியர் வேலை பார்த்து வந்த நேருவால் இப்படி பீல்டு ஒர்க்கில் ஈடுபட முடியாமல் தடுமாறியுள்ளார். அவருக்கு இந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் போயுள்ளது. இந்த நி்லையில்தான் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். டாக்டர் என்பதால் மாத்திரை சாப்பிட்ட கையோடு நேராக அவரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அட்மிட் ஆகியுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். அவர் 4 மாத்திரைகள் சாப்பிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேருவின் மனைவி இதுகுறித்துக் கூறுகையில், எனது கணவர் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் சிலருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி தொந்தரவு செய்வார்கள். 

அரசியல்வாதிகளின் செல்போன் அழைப்பு தான் அதிகம் வரும். இரவிலும் அழைப்புகள் வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதிகாலையில் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சென்றவர் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். எனது கணவருக்கு இருப்பிட மருத்துவ அதிகாரி பணி ஒதுக்காமல் அந்த பணிக்கு நிரந்தரமாக வேறு ஒருவரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட கையோடு அவரே வந்து சிகிச்சைக்கு அட்மிட் ஆனதால், உண்மையில் டாக்டர் நேருவுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இல்லை. கவனம் ஈர்த்து இருப்பிட மருத்துவர் பதவியிலிருந்து இடமாறுதல் பெறுவதே அவரது எண்ணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top