↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மறைந்த மைக்கேல் ஜாக்சன், தனது செக்ஸ் இச்சைகளால் பாதிக்கப்பட்ட சிறார்கள் 20 பேருக்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் அளவுக்கு ரகசியமாக பணம் கொடுத்து சரிக்கட்டியதாக, ஜாக்சனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள இருவரின் வக்கீல்கள் கூறியுள்ளனர். தாங்கள் இளம் சிறார்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் தங்களை பாலியல் ரீதியாக சீரழித்து விட்டதாக கூறி, அவரது எஸ்டேட் வீட்டை தங்களுக்கு இழப்பீடாக தர வேண்டும் என்று கோரி வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேப்சக் ஆகியோர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போதுதான் இவர்களது வக்கீல் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இந்த வழக்கி் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளார் நீதிபதி. இந்த இருவரும் கோரும் ஜாக்சனின் எஸ்டேட் வீட்டின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் வேட் ராப்சன். இவர் தற்போது நடனக் கலைஞராக இருக்கிறார். தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பலமுறை ஜாக்சன் தவறாக பயன்படுத்தியதாக கூறுகிறார் ராப்சன். தற்போது ராப்சனுக்கு 32 வயதாகிறது. சேப்சக்குக்கு 36 வயதாகிறது.

1987ம் ஆண்டு தான் 8 வயது சிறுவனாக இருந்தபோது ஜாக்சன் தன்னை தவறாகப் பயன்படுத்தியதாக சேப்சக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டில் இன்னொரு முறை தன்னை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை ஜாக்சன் ரகசியமாக திருமணம் வேறு செய்ததாகவும் இவர் கூறுகிறார். மேலும் துப்புறவுத் தொழிலாளியான தனது தந்தைக்கு ஜாக்சன் 1 மில்லியன் டாலர் பணத்துக்கு செக் எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் சேப்சக். சேப்சக்கை ஜாக்சன் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக அவரது வக்கீல் திடுக்கிடும் தகவலை கூறுகிறார்.

மறுபக்கம், ராப்சன் 5 வயதாக இருந்தபோது பிரிஸ்பேனில் வைத்து ஜாக்சனுக்கு அறிமுகமாகியுள்ளார். நடனத்தில் ஆர்வம் மிக்கவரான ராப்சன், ஜாக்சனின் தீவிர ரசிகர் ஆவார். இதனால்தான் அவர் ஜாக்சனிடம் நெருங்கிப் பழகியுள்ளார். ராப்ஜனுக்கு ஆதரவாக ஜாக்சனிடம் முன்பு பணிப்பெண்ணாக இருந்த பிளாங்கா பிரான்சியா வாக்குமூலம் அளிக்கவுள்ளார். பலமுறை படுக்கை அறையி்ல் ராப்சனுடன், ஜாக்சன் நிர்வாணமாக இருந்ததாக இவர் கூறுகிறார். மேலும் பாத்ரூமில் ராப்சனுக்கு ஜாக்சன் குளிப்பாட்டி விட்டதாகவும், அவர் கூறியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top