↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது அறிவிப்பில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பெற்று கோலிவுட்டுக்கு பெருமை தேடித்தந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது உன்னிகிருஷ்ணன் விஜய் நடிக்கும் படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.,

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள அட்லி, அந்த படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடினால் பொருத்தமாக இருக்கும் என கருதிய ஜி.வி.பிரகாஷ்குமார் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் இசையில் 'சைவம்' படத்தில் பாடிய 'அழகே.....என்ற பாடலுக்குத்தான் உத்ரா தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உத்ரா உன்னிகிருஷ்ணன், 'தான் ஒரு விஜய்யின் மிகப்பெரிய ரசிகை' என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருடைய படத்திலேயே  பாடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதால் அவர் இரட்டை சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top