↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  அதிசய சக்தி கிடைத்தால் பலரை அடிப்பேன் - 'அனேகன்' அமைரா ஆவேசம்
‘அனேகன்'  படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். தற்போது இந்தியில் ‘மிஸ்டர் எக்ஸ்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். கண்ணுக்கு தெரியாத கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இதில் நடித்த அனுபவம்பற்றி அவர் கூறினார்.கண்ணுக்கு தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது மிக சிரமம். எங்காவது ஒரு இடத்தில் சிறு புள்ளியை அடையாளமாக கொடுத்துவிட்டு அதையே கற்பனையில் கதாபாத்திரமாக்கிக்கொண்டு நடிக்க வேண்டும். நிஜ வாழ்க்கையில் உருவம் இல்லாமல் உங்களால் செயல்பட முடிந்தால் என்ன செய்வீர்கள் என்கிறார்கள்.

 அப்படியொரு அதிசய சக்தி கிடைத்தால் நிறைய செய்யலாம். முதலில், பலரை கன்னத்தில் அறையவே எண்ணுவேன். அவர்கள் யாரென்று வெளிப்படையாக சொல்ல மாட்டேன். நேரடியாக கன்னத்தில் அறைந்தால் நிச்சயம் அவர்கள் கையில் சிக்க வேண்டி இருக்கும். கண்ணுக்கு தெரியாத உருவமாக இருந்தால் எளிதாக அறைந்துவிட்டு எஸ்ஸாகிவிடலாம் அல்லவா?இவ்வாறு அமைரா தஸ்தூர் கூறினார். அமைராவுக்கு யார் மீது கோபம், சினிமா துறையை சேர்ந்தவர்களைத்தான் அவர் குறிப்பிடுகிறாரோ என பாலிவுட்டில் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top