↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷால் அவர்கள் தற்போது நடித்து வெளிவந்த அனைத்து படங்களில் பாண்டியநாடு தவிர வேறு ந்தப்படமுமே சொல்லும்படியாக ஓடவில்லை.  இவர் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மோத்வானியுடன் நடித்த படமான “ஆம்பள” மற்றும் சுருதிஹாசனுடன் நடித்த படமான “பூஜை” ஆகிய படங்கள் இவருக்கு முறையே தோல்வியையும், அவரேஜ் வெற்றியையும் தேடித்தந்துள்ளது.
விஷால் தற்போது நடித்து வரும் படம் “பாயும் புலி” இப்படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இப்படத்தில் விஷாலுக்கு கதாநயாகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு “சண்டைக்கோழி” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இப்படத்திற்கான ஹீரோயின் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் எமி ஜாக்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 
மேலும் மூன்று முன்னணி நடிகைகளுடனும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தன்னுடன் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிக்க மாட்டேன் ரசிகர்கள் ஏற்கனவே கண்ட ஜோடிகளை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே புது முகம் மற்றும் முன்னணி நடிகைகளுடன் மட்டும் நடிப்பேன் என கூறுகிறார் விஷால்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top