↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படம் முதலில் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் கமல்ஹாசனாலும், அதன் பின்னர் ஏப்ரல் 10ஆம் தேதி என்று படக்குழுவினர்களாலும் கூறப்பட்ட போதிலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போவதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததுதான் படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் 25 ஷாட்டுகளின் விஷுவல் எபெக்ட்ஸ் பணி இன்னும் முடிய வேண்டிய நிலை உள்ளதாகவும், இந்த பணிகள் முடிந்த பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் படக்குழுவினர்களால் கூறப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 24 அல்லது மார்ச் 1ஆம் தேதி உத்தம வில்லன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தம வில்லன் படத்தின் VFX சூப்பர்வைசராக பணிபுரியும் மதுசூதனனிடம் கமல்ஹாசன், 'இந்த படத்தின் VFX பணிக்காக தேவையான அளவு கால அளவு எடுத்து கொள்ளுமாறும், இன்னும் இரண்டு வாரங்கள் ஆனாலும் பரவாயில்லை, படத்தின் VFX ரிசல்ட் தான் எதிர்பார்த்த மாதிரி வரவேண்டும் என ஆலோசனை கூறியதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இதே மதுசூதனன் அவர்கள்தான் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' மற்றும் தெனாலி படங்களுக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top